Showing posts with label தமிழ் பாடல்கள் (Tamil). Show all posts
Showing posts with label தமிழ் பாடல்கள் (Tamil). Show all posts

Monday, 24 November 2014

வண்ணம் கொண்ட வெண்ணிலவே - பாடல் வரிகள் (Vannam konda vennilave - Lyrics)



படம் : சிகரம் 
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் 
இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம் 
இயற்றியவர் : வைரமுத்து 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!

பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!

கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை!
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை!
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்!
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி!

கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்!
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்!
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே!


எனக்கு பிடித்த பாடல் - பாடல் வரிகள் (Yenakku piditha paadal - Lyrics)



படம் : ஜூலி கணபதி 
இசை : இளையராஜா 
இயற்றியவர் : நா. முத்துக்குமார் 
பாடியவர் : ஷ்ரேயா கோஷல் 

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே!
உன் மனது போகும் வழியை
எனது மனதும் அறியுமே!

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே!
காதல் நோய்க்கு மருந்து
தந்து நோயை கூட்டுமே!

உதிர்வது பூக்களா ?
மனது வளர்த்த சோலையிலே
காதல் பூக்கள்
உதிருமா?

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே!
உன் மனது போகும் வழியை
எனது மனதும் அறியுமே!

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே!
காதல் நோய்க்கு மருந்து
தந்து நோயை கூட்டுமே!


உதிர்வது பூக்களா ?
மனது வளர்த்த சோலையிலே
காதல் பூக்கள்
உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூர போகிறாய்!
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்!

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே!
குழந்தையை போலவே
இதயமும் தொலையுதே!

வானத்தில் பறக்கிறேன்!
மோகத்தில் மிதக்கிறேன்!
காதலால் நானுமோர்
காத்தாடி ஆகிறேன்!

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே!
உன் மனது போகும் வழியை
எனது மனதும் அறியுமே!

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே!
காதல் நோய்க்கு மருந்து
தந்து நோயை கூட்டுமே!

வெள்ளி கம்பிகளைப் போல 
ஒரு தூரல் போடுதோ!
விண்ணும் மண்ணில் வந்து சேர 
அது பாலம் போடுதோ!

நீர்த்துளி தீண்டினால் 
நீ தொடும் ஞாபகம்!
நீ தொடும் இடமெல்லாம் 
வீணையின் தேன் ஸ்வரம்!

ஆயிரம் அருவியை 
அன்பிலே நனைக்கிறாய்!
மேகம் போலே - எனக்குள்ளே 
மோகம் வளர்த்து கலைகிறாய்!

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே!
உன் மனது போகும் வழியை
எனது மனதும் அறியுமே!

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே!
காதல் நோய்க்கு மருந்து
தந்து நோயை கூட்டுமே!

உதிர்வது பூக்களா ?
மனது வளர்த்த சோலையிலே
காதல் பூக்கள்
உதிருமா?

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே!
உன் மனது போகும் வழியை
எனது மனதும் அறியுமே!

Wednesday, 12 November 2014

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - பாடல் வரிகள் (Aanandha yaazhai - Lyrics)



படம் : தங்கமீன்கள் 
பாடியவர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி 
இசை : யுவன் சங்கர் ராஜா 
இயற்றியவர் : நா. முத்துக்குமார்  


ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மழையின் அழகோ தாங்கவில்லை!
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி!
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

உன் முகம் பார்த்தால் தோணுதடி 
வானத்து நிலவு சின்னதடி 
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி 
உன்னிடம் வெளிச்சம் கேட்க்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து 
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி 
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!

Tuesday, 11 November 2014

அன்பே என் அன்பே - பாடல் வரிகள் (Anbe en anbe - Lyrics)







படம்: தாம் தூம் 
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயற்றியவர்: நா. முத்துக்குமார் மற்றும் பா. விஜய் 


அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்!
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்!

கண்ணில் சுடும் வெயில் காலம் - உன்
நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம் - இனி
அருகினில் வசப்படும் சுகம் சுகம்!

நீ நீ ஒரு நதியலை ஆனாய்
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ!

மழையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லாம்
மௌனத்திலே கலக்கும்!

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்!
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்!

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே!

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு!

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்!
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்!

கண்ணில் சுடும் வெயில் காலம் - உன்
நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம் - இனி
அருகினில் வசப்படும் சுகம் சுகம்!

Monday, 10 November 2014

ஆடி அடங்கும் வாழ்க்கையடா - பாடல் வரிகள் (Aadi adangum vaalkkayadaa - Lyrics)








படம் : நீர்க்குமிழி
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை : வி.குமார்
இயற்றியவர் : 'உவமைக் கவிஞர்' சுரதா


ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை...

Sunday, 16 June 2013

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் - பாடல் வரிகள் (Unnai Arindhal - Lyrics)



உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா

(உன்னை)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா

(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

படம் : வேட்டைக்காரன்
இசை : K.V.மகாதேவன்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.செளந்தரராஜன் 

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே - பாடல் வரிகள் (Oru Naalil Vazhkkai - Lyrics)



ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓஓஓ! கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஓஓஓ! ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓஓஓ! கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓஓஓ! கண் மூடிக்கொண்டால்  ஓஓஓஓஓஓ …

போர்களத்தில் பிறந்துவிட்டோம்
வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
ஓஓஓ! அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓஓஓ! இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓஓஓ! மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஓஓஓ! அந்த கடவுளை கண்டால் ஓஓஓஓஓஓ …

"அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்"
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஓஓஓ! பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
ஓஓஓ! பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்
ஓஓஓ! கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்
ஓஓஓ! மறு பிறவி வேண்டுமா ஓஓஓஓஓஓ …

படம் : புதுப்பேட்டை
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா

இயற்றியவர்:நா.முத்துக்குமார்

புத்தியுள்ள மனிதரெல்லாம் - பாடல் வரிகள் (Puthiyulla manidharellam - lyrics)




புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

படம் : அன்னை
பாடியவர் : சந்திரபாபு
பாடல் வரிகள் : கண்ணதாசன்

மயக்கமா கலக்கமா - பாடல் வரிகள் (Mayakkama Kalakkama - Lyrics with Translation)



திரைப்படம்:சுமைதாங்கி
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி 
பாடியவர்:P.B.ஸ்ரீநிவாஸ்

 
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு

நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா


Translation of Mayakkama kalakkama song to English:

Are you dazed and queasy?
Is there confusion in your heart?
Is there uncertainty in your life?

Life has thousands of problems in it
Every one’s house has anxieties (not just you)

Whatever the trouble is
If you wilt and stop, they don’t go away

If you have a heart that can endure anything
There will be peace until the end

Make the poor heart a palace
Sing poetically about night and day (sadness and joy)

Dedicate tomorrow’s time/worries to god and
Look for peace in your present life

There are crores of people worse off than you
Think about that and feel grateful and peaceful

Translation Courtesy: http://jaydei.wordpress.com/2011/07/30/mayakkama-kalakkama-lyrics-and-translation/

ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே - பாடல் வரிகள் (aaha kadhal konji konji - Lyrics)


ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே
அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே
வினாத்தாளில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியா

ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே

நதியில் விழும் இலை இந்த காதலா
கரையை தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா எழுந்திடுவேனா
எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா
உன்னை பார்ப்பதை நான் அறியேன்
உன்னை பார்கிறேன் வேறறியேன்
என்னுடன் நீயா உன்னுடன் நானா நானே நீயா நீயே நானா
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்

ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே

எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்திடுவேனா
கிடைதிடும் போதும் தொலைந்திடுவேனா
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா வருவது நானா
திசை அரியாது திரும்பிடுவேனா
காதலின் பொன் ஊஞ்சலில்
அசைவது சுகம் சுகம்

ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
(ஆஹா காதல்)

படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர்: நந்தினி ஸ்ரீகர்
பாடல்:நா.முத்துக்குமார்
 

பல்லாக்கு வாங்க போனேன் - பாடல் வரிகள் (Pallaaku vaanga ponen - Lyrics)



பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக

மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட
அதை மண் மீது போட்டுவிட்டேன்
வெய்யிலில் வாட ..வெய்யிலில் வாட
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக

மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனை இல்லை
கல்யாணம் கொள்வதுமட்டும்
என் வசமில்லை..என் வசமில்லை.. (பல்லாக்கு.......)

 கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கொண்ட பின்னே பிரிவை சொல்லி வந்தது பாவம்
வெறும் கூடாக பூமியில் இன்னும்
வாழ்வது பாவம்..வாழ்வது பாவம் .... (பல்லாக்கு.......)

திரைப்படம்:பணக்கார குடும்பம்.
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்:T.M.செளந்தரராஜன் 

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு - பாடல் வரிகள் (Nenjam Undu Nermai Undu - Lyrics)



நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு?
நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
 இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

 உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா .



பாடல் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
திரைப்படம் : என் அண்ணன்
பாடியவர் : T.M.செளந்தரராஜன்
இயற்றியவர் : கண்ணதாசன்
திரையிசை : K.V.மகாதேவன்


வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் - பாடல் வரிகள் (Vaazhndhalum yesum - song lyrics)




வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)

பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)

படம் : நான் பெற்ற செல்வம்
இசை : ஜி. ராமனாதன்
பாடியவர். டி. எம். சவுந்தர்ராஜன்
பாடலாசிரியர்: கா.மு.செரிப்

வருடம்: 1956