Sunday, 16 June 2013

மயக்கமா கலக்கமா - பாடல் வரிகள் (Mayakkama Kalakkama - Lyrics with Translation)



திரைப்படம்:சுமைதாங்கி
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி 
பாடியவர்:P.B.ஸ்ரீநிவாஸ்

 
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு

நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா


Translation of Mayakkama kalakkama song to English:

Are you dazed and queasy?
Is there confusion in your heart?
Is there uncertainty in your life?

Life has thousands of problems in it
Every one’s house has anxieties (not just you)

Whatever the trouble is
If you wilt and stop, they don’t go away

If you have a heart that can endure anything
There will be peace until the end

Make the poor heart a palace
Sing poetically about night and day (sadness and joy)

Dedicate tomorrow’s time/worries to god and
Look for peace in your present life

There are crores of people worse off than you
Think about that and feel grateful and peaceful

Translation Courtesy: http://jaydei.wordpress.com/2011/07/30/mayakkama-kalakkama-lyrics-and-translation/

20 comments:

  1. இது யார் எழுதிய பாடல்

    ReplyDelete
    Replies
    1. கவிப்பேரரசர் கவியரசர் கண்ணதாசன்

      Delete
    2. Intha page oda first line parunga

      Delete
    3. English translation excellent

      Delete
  2. இது யார் எழுதிய பாடல்

    ReplyDelete
    Replies
    1. கவியரசு கண்ணதாசன்

      Delete
  3. this songs brings tears whenever i listen to it

    ReplyDelete
  4. there can never be such amazing emotions depicted in paper ever again ...praise to one and only kaviarasar kannadasan sir

    ReplyDelete
  5. இந்த பாடல் தான் கவிஞர் வாலியை நமக்கு சினிமா துறைக்கே அளித்தது. இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

    ReplyDelete
  6. அண்ணா அவர்களிடம் இருந்து ஈ.வெ.கி.சம்பத் தலைமையில் கண்ணதாசன்
    போன்றவர்கள் பிரிந்து தனிக்கட்சி துவங்கினர்.அதன் பெயர் தமிழ் தேசிய கட்சி.
    அவர்களுடன் கோவை செழியன் அவர்களும்
    பிரிந்து வந்தார்.

    அண்ணா அவர்களை எதிர்த்து அவர்களால்
    கட்சி நடத்த முடியவில்லை.

    கோவை செழியன் அண்ணா அவர்களை விட்டு
    பிரிந்து வந்ததற்காக மிகவும் வருத்தப்பட்டு ஒதுங்கி இருந்த போது கண்ணதாசன் அவரின் சென்று திரைப்படம் தயாரிக்கலாம் வாருங்கள் என்று கோவை செழியன் அவர்களை திரைப்பட
    துறைக்கு அழைத்து வந்து அவர் தயாரித்த முதல் படம் தான் சுமைதாங்கி.

    [பி.கு: ஈ.வெ.கி.சம்பத் மற்றும் கண்ணதாசன் போன்றவர்கள் அண்ணா அவர்களை திட்டிப் பேசவே அண்ணா அவர்கள் மேல் பற்றுக் கொண்ட கோவை செழியன் அவர்கள் விட்டுப் பிரிந்து அண்ணா அவர்களுடன் இணைந்தார் என்பது வரலாறு ]

    ReplyDelete
  7. வாழ்க்கை தத்துவம் கவிஞர் கண்ணதாசன் புகழ் வாழ்க

    ReplyDelete
  8. இந்த பாடலைப் பலமுறை கேட்டிருக்கிறேன். பாடலமைப்பை இன்றுதான் கவனித்தேன்., வித்யாசமாக இருக்கிறது. எனக்கு இலக்கணம் அவ்வளவு தெரியாது...இருந்தாலும் எனக்குத்தோன்றியதைப் பதிவு செய்கிறேன். சாதாரணமாக பல்லவி இரண்டு வரி என்றால் தொடர்ந்து வரும் அனுபல்லவி, சரணம் நான்கு, எட்டு...என்று வரும். இதில் பல்லவி மூன்று வரிகள். என்னை கவனிக்க வைத்தது. தொடர்ந்து வரும் சரணத்தில் நான்கு வார்த்தைகள் கொண்ட இரண்டு வரிகளும், மூன்று வார்த்தைகள் கொண்ட மூன்று வரிகளும் கொண்டு அமைந்திருக்கிறது மிகவும் வியக்க வைக்கிறது. இந்த பாடல் அமைப்பின் இலக்கணம் தெரிந்தவர்கள் விளக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
  9. அருமையான பதிவு. மொழிபெயர்ப்பு செய்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. Kannadaasan is another God of poetry & one of the greatest poets in Tamil History

    ReplyDelete
  11. I used to read or hear this song, whenever I feel depressed.
    Also, I used to send this song whenever my friends are feeling depressed.
    Definitely, it sooths your mind and everyone.
    Hats off to Kavingar Kannadasan

    ReplyDelete