Sunday, 16 June 2013

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு - பாடல் வரிகள் (Nenjam Undu Nermai Undu - Lyrics)



நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு?
நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
 இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

 உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா .



பாடல் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
திரைப்படம் : என் அண்ணன்
பாடியவர் : T.M.செளந்தரராஜன்
இயற்றியவர் : கண்ணதாசன்
திரையிசை : K.V.மகாதேவன்


18 comments:

  1. நீதி வரும் , இல்லையெனில் வாளை எடு

    ReplyDelete
    Replies
    1. அதில் நீதி வரவில்லையெனில் வாளை நிமிர்த்து!

      Delete
  2. ராமச்சந்திரனின் அடியேன்.....
    நான்...

    ReplyDelete
  3. அருமையான பாடல் வரிகள்

    ReplyDelete
  4. Only Kannadasan can write like that...what an amazing poet..!!

    ReplyDelete
  5. Indha poomi sirikum andha sammi sirikum😍

    ReplyDelete
  6. கண்ணதாசன் mgr இப்படியும் எழுதி இருக்கிறாரா?அருமை

    ReplyDelete
  7. எவ்வளவு நல்ல பாட்டு

    ReplyDelete
  8. உரிமைக்கு குரல் கொடுத்து
    உரிமைக்கு குரல் கொடுத்த பாடல்

    ReplyDelete
  9. உரிமைக்கு குரல் கொடுத்து
    உள்ளத்திற்கு உரமேற்றிய பாடல்

    ReplyDelete
  10. வாலியும் சேர்ந்து இயற்றினாரா

    ReplyDelete