Sunday, 16 June 2013

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் - பாடல் வரிகள் (Unnai Arindhal - Lyrics)



உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா

(உன்னை)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா

(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

படம் : வேட்டைக்காரன்
இசை : K.V.மகாதேவன்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.செளந்தரராஜன் 

26 comments:

  1. Kvm sirwas an expert in carnatic music.but in this song he has composed with bass guitar messmerising and then humming is mexican style.excellant lyrics.

    ReplyDelete
  2. அருமையான வரிகள்..👏👏👏✍✍

    ReplyDelete
  3. அருமையான வரிகள்..👏👏👏✍✍

    ReplyDelete
  4. Super song அழகான, அருமையான தமிழ் வரிகள்.

    ReplyDelete
  5. Maatru kuraiyatha mannan*
    change it

    ReplyDelete
    Replies
    1. Thanks
      Antha line than romba neram kettum connection agala

      Delete
  6. How is it possible ...???
    That's the combination of MGR,KANNADHASAN,TMS
    MY ALL TIME FAVOURITE

    ReplyDelete
  7. Nalla arurham ulla song I lik it

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. I hear phrase..ma po...unnai arindhaal....what does it mean ?.

    ReplyDelete
  10. தன்னை அறிய தான் ஓர் ஏழைதானா என்று அறிய வேண்டும் அநேகமான நடுத்தர வர்க்கத்தினர் ஏழையாக நடித்து சலுகைகளை பெறுகின்றனர் இதுவே அரசுகளின் இலவசத் திட்டங்கள் வறுமை ஒழிப்பு திட்டங்கள் படுதோல்வி அடைகின்றன இந்தியா வறுமை குறியீட்டில் 111 வது இடத்தில் உள்ளது உலகில் மொத்த நாடுகள் 193 (112 முதல் 193 ஆப்பிரிக்க நாடுகள் சிறிய ராணுவ ஆட்சிகள்) பணக்காரர் என்பவர் வருமானவரி செலுத்தாதவரா? அரசியல்வாதிகள்!

    ReplyDelete